யூனோமியா மற்றும் சுழி அளவிலான கார்பன் உமிழ்வுப் பகுப்பாய்வு அமைப்பு நடத்திய ஆய்வில், உலகின் ஏழு நாடுகள் 2024 ஆம் ஆண்டில் அதிகம் பயன்படுத்தப் படும் நெகிழிகளில் மூன்றில் இரண்டு பங்கை உற்பத்தி செய்ததாகக் குறிப்பிடுகிறது.
பாலிஎத்திலீன், பாலிப்ரொப்பிலீன், பாலிஎத்திலீன் டெரெப்தாலேட் மற்றும் பாலிஸ்டிரீன் ஆகியவற்றின் உலகளாவிய உற்பத்தியில் சீனா மட்டும் 34 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளது.
இந்த உற்பத்தியானது அடுத்த ஆறு அதிக நெகிழி உற்பத்தி செய்யும் நாடுகளின் மொத்த அளவிற்குச் சமமாகும்.
அதனைத் தொடர்ந்து 13 சதவீதத்துடன் அமெரிக்காவும், தலா 5 சதவீதப் பங்களிப்புடன் சவுதி அரேபியா மற்றும் தென் கொரியா ஆகியவையும் உள்ளன.
மொத்த உற்பத்தியில் இந்தியா 4 சதவீதம், ஜப்பான் 3 சதவீதம், ஜெர்மனி 2 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளன.
சீனாவின் அரசுக்கு சொந்தமான சினோபெக் நிறுவனம் மொத்த உற்பத்தியில் 5.4 சதவீதத்துடன் உலகின் முன்னணி நெகிழி உற்பத்தியாளராக இருந்தது.