- 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் டிஜிட்டல் வானொலியை அறிமுகப்படுத்துவதன் மூலம் ‘ஆகாஷ்வானி’ என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் ‘அகில இந்திய வானொலியைப்’ புதுப்பிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
- இந்தத் தகவலானது புது தில்லியில் நடைபெற்ற வருடாந்திர ஆகாஷ்வானி விருதுகள் வழங்கும் விழாவின் போது மத்தியத் தகவல் தொழில்நுட்ப மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சரான பிரகாஷ் ஜவடேகரால் தெரிவிக்கப் பட்டது.
அகில இந்திய வானொலி (AIR) பற்றி
- AIR ஆனது 1930 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
- இது 1956 ஆம் ஆண்டு முதல் ஆகாஷ்வானி (“வானிலிருந்து குரல்”) என்று அதிகாரப் பூர்வமாக அழைக்கப் படுகின்றது.
- AIR என்பது பிரசார் பாரதியின் தூர்தர்ஷன் தொலைக்காட்சி அமைப்பின் சகோதரப் பிரிவாகும்.
- இந்தியாவின் மிகப்பெரிய பொது ஒளிபரப்பு நிறுவனம் பிரசார் பாரதி ஆகும்.