2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பம்
November 8 , 2024 175 days 253 0
கடந்த 124 ஆண்டுகளில் (1914 ஆம் ஆண்டு முதல்) இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதமானது வெப்பமான அக்டோபர் மாதமாக பதிவாகியுள்ளது.
அந்த மாதத்தில் சராசரியாக 26.92 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
இது எதிர்பார்த்த அளவை விட 1.23 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.
அக்டோபர் மாதத்திற்கான குறைந்தபட்ச வெப்பநிலை முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியது என்பதோடு இது 1901 ஆம் ஆண்டில் IMD பதிவுகளை மேற்கொள்ளத் தொடங்கியதிலிருந்து மிக அதிகமாகும்.
டெல்லி சஃப்தர்ஜங் பகுதியின் மாதாந்திர அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச சராசரிகள் முறையே 35.1 டிகிரி செல்சியஸ் மற்றும் 21.2 டிகிரி செல்சியஸ் என பதிவு செய்யப் பட்டுள்ளது.