2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்க எண்ணிக்கை
August 18 , 2024 255 days 368 0
2024 ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஆனது தலா 40 தங்கப் பதக்கங்களுடன் அதிக தங்கப் பதக்கங்களைப் பெற்ற ஒரு நாடு என்ற பட்டத்தினைப் பகிர்ந்து கொள்கின்றன.
அமெரிக்கா 126 (40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம்) பதக்கங்களை வென்றுள்ளது.
சீனா 91 (40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம்) மொத்தப் பதக்க எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தியாவானது, ஒரு வெள்ளி, ஐந்து வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 6 பதக்கங்களுடன், ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் 71வது இடத்தைப் பெற்றுள்ளது.
இது 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்கள் உட்பட 7 பதக்கங்களுடன் ஒட்டு மொத்தமாக 48வது இடத்தைப் பிடித்த இந்தியாவின் பதக்க எண்ணிக்கையினை விடக் குறைவாகும்.