2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான கூடுதல் நிதி
December 17 , 2023 508 days 295 0
தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்காக (EVM) கூடுதலாக 3,147.92 கோடி ரூபாய் செலவழிப்பதற்குப் பாராளுமன்றத்தின் ஒப்புதலை அரசாங்கம் கோரியுள்ளது.
இது தேர்தலுக்காக கணிக்கப்பட்ட மொத்தச் செலவின மதிப்பினை 5,000 கோடி ரூபாய்க்கு மேல் அதிகரிக்கிறது.
தேர்தல் தொடர்பான செலவினங்களுக்கு நிதி அளிப்பதற்காக சட்ட அமைச்சகத்திற்கு 3,147.92 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிர்வாகச் செலவுகளுக்காக தேர்தல் ஆணையத்துக்கு 73.67 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக வாங்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் சோதனை மற்றும் பராமரிப்புக்காக 36.20 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை நடத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்குவதற்கு 575.07 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
2014, 2009 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களுக்கான செலவினம் முறையே 3,870.34 கோடி ரூபாய், 1,114.38 கோடி ரூபாய் மற்றும் 1,016.08 கோடி ரூபாய் ஆகும்.