2024 ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதிகள் தேர்வு முடிவு ரத்து
March 3 , 2024 574 days 654 0
245 உரிமையியல் நீதிபதிகள் பணி நியமனத்திற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட தற்காலிகத் தேர்வுப் பட்டியலை ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது, தற்காலிகப் பட்டியலை உருவாக்கும் போது இடஒதுக்கீடு விதியை சரியாகப் பின்பற்றவில்லை என்று உயர் நீதிமன்றம் கூறியது.
2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டத்தின் 27வது பிரிவினைப் பின்பற்றி 92 “பின்னடைவு” காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.
மீதமுள்ள 153 தற்காலத்திய காலிப் பணியிடங்கள் ஆனது இட ஒதுக்கீட்டின் பொது விதியைப் பின்பற்றி நிரப்பப்பட வேண்டும்.