TNPSC Thervupettagam

2024 ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் குடும்பக் கடன்

April 22 , 2024 25 days 107 0
  • இந்தியாவின் குடும்பக் கடன் மதிப்புகள், 2023 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்திற்குள் (Q3FY24) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 40 சதவீதத்தை எட்டியிருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
  • நிகர நிதிச் சேமிப்பானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 5 சதவீதமாகச் சரிந்தது.
  • 2022-23 ஆம் ஆண்டின் இதே காலக் கட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10.5 சதவீதமாக இருந்த குடும்பங்களின் மொத்த நிதிச் சேமிப்பானது முந்தைய ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், 10.8 சதவீதமாகச் சற்று அதிகரித்தது.
  • இருப்பினும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5 சதவீதமாக இருந்த கடன் இருப்புகள் ஆனது 5.8 சதவீதமாக அதிகரித்தன.
  • குடும்பங்களின் சொத்து சேமிப்பானது, 2022-23 ஆம் ஆண்டில் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியது என்பதோடு குடும்பங்களின் மொத்தச் சேமிப்பு ஆனது ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 18.4 சதவீதமாகச் சரிந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்