TNPSC Thervupettagam

2024 ஆம் நிதியாண்டில் வர்த்தகச் செயல்திறன்

April 20 , 2024 13 days 75 0
  • சரக்குப் பொருட்கள் இறக்குமதியில் ஏற்பட்ட அதீத வீழ்ச்சியால் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையானது கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவிற்கு மார்ச் மாதத்தில் 15.6 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
  • வர்த்தகப் பற்றாக்குறையானது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 18.96 பில்லியன் டாலராகவும், 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 18.71 பில்லியன் டாலராகவும் இருந்தது.
  • இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதியானது மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் 776.68 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
  • 2024 ஆம் நிதியாண்டில் சரக்குப் பொருட்களின் ஏற்றுமதி 437.06 பில்லியன் டாலராக சரிந்தது என்ற நிலையில் அதே சமயம் சேவைகளின் ஏற்றுமதியானது 4.4% அதிகரித்து 339.62 பில்லியன் டாலராக இருந்தது.
  • 2023 ஆம் ஆண்டில் 121.62 பில்லியன் டாலராக இருந்த நாட்டின் ஒட்டு மொத்த வர்த்தகப் பற்றாக்குறையானது, 2024 ஆம் நிதியாண்டில் 35.77% அதிகரித்து 78.12 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
  • 2022-23 ஆம் நிதியாண்டில் 451.07 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் சரக்குப் பொருட்கள் ஏற்றுமதியானது 2023-24 ஆம் நிதியாண்டில் 3.11% குறைந்து 437.06 பில்லியன் டாலராக இருந்தது.
  • 2022-23 ஆம் நிதியாண்டில் 715.97 பில்லியன் டாலர் ஆக இருந்த சரக்கு இறக்குமதியானது 2023-24 ஆம் ஆண்டில் 5.41% குறைந்து 677.24 பில்லியன் டாலராக இருந்தது.
  • சேவைகள் ஏற்றுமதியானது 2023-24 ஆம் நிதியாண்டில் 339.62 பில்லியன் டாலராக மதிப்பிடப் பட்டுள்ளது என்ற வகையில் இது 2022-23 ஆம் நிதியாண்டில் 325.33 பில்லியன் டாலராக பதிவான சேவைகள் ஏற்றுமதி மதிப்பினை விட 4.39% அதிகம் ஆகும்.
  • 2023 ஆம் நிதியாண்டில் சுமார் 182.05 பில்லியன் டாலராக இருந்த சேவைகள் இறக்குமதியானது 2.46% குறைந்து 2024 ஆம் நிதியாண்டில் 177.56 பில்லியன் டாலராக மதிப்பிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்