TNPSC Thervupettagam

2024–25 ஆம் ஆண்டில் சிறு நிதிக் கடன் தவணை தவறுதல்

October 14 , 2025 14 hrs 0 min 11 0
  • சிறுநிதி நிறுவனங்களுக்கான (MFI) சுய-ஒழுங்குமுறை அமைப்பான Sa-Dhan, வருடாந்திர பாரத் சிறுநிதி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • 2024–25 ஆம் நிதியாண்டிற்கான அறிக்கையானது, நாடு முழுவதும் சிறுநிதிக் கடன் தவணை தவறுதல்களில் அதிக உயர்வைக் காட்டுகிறது.
  • 30 நாட்களுக்கு மேல் நிலுவையில் உள்ள கடன்கள்/தொகுப்புகள் (PAR 30+) 2024–25 ஆம் நிதியாண்டில் 6.2% ஆக அதிகரித்துள்ளது என்ற நிலையில் இது 2023–24 ஆம் நிதி ஆண்டில் 2.1% ஆக இருந்தது.
  • 90 நாட்களுக்கு மேல் நிலுவையில் உள்ள கடன்கள் வாராக் கடன்கள் (NPAs) என வகைப் படுத்தப் பட்டுள்ளன என்பதோடு கடந்த ஆண்டு 1.6% ஆக இருந்த இது தற்போது 4.8% ஆக உயர்ந்துள்ளது.
  • பீகாரில் அதிகபட்சமாக 57,712 கோடி ரூபாய் சிறுநிதி கடன் நிலுவையில் உள்ளது.
  • பீகாரில், 7.2% கடன்கள் 30 நாட்களுக்கு மேல் நிலுவையில் உள்ளன என்பதோடு மேலும் 4.6% கடன்கள் 90 நாட்களுக்கு மேல் நிலுவையில் உள்ளன.
  • கிராமப்புறக் கடன் வாங்குபவர்கள் 2.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்களை பெற்றுள்ளனர் என்ற நிலையில் அதில் 6.4% கடன்கள் 30 நாட்களுக்கு மேல் நிலுவையில் உள்ளன.
  • பகுதியளவு நகர்ப்புற (6.1%) மற்றும் நகர்ப்புற (6%) பகுதிகளில் நிலுவையில் உள்ள கடன் விகிதம் குறைவாக இருந்தது என்பதோடு இது கிராமப்புறங்களில் கடன் திருப்பிச் செலுத்துதலின் மீதான அதிக நெருக்கடியைக் காட்டுகிறது.
  • இந்தத் தரவானது, குறிப்பாக கிராமப்புற இந்தியாவில், சிறுகடன்/நிதித் துறையில் அதிகரித்த கடன் ஆபத்து மற்றும் அதைத் திருப்பிச் செலுத்தும் நெருக்கடியைப் பிரதிபலிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்