TNPSC Thervupettagam

2024–25 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டு வரவுகள்

June 16 , 2025 19 days 83 0
  • 2024-25 ஆம் ஆண்டில், இந்தியா கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக அதிகமாக 81 பில்லியன் டாலர் என்ற மொத்த அந்நிய நேரடி முதலீட்டினைப் பெற்றது.
  • 2024–25 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டு மொத்தமான அந்நிய நேரடி முதலீட்டில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகியவை ஒரு சேர 51% பங்கினைக் கொண்டு இருந்தன.
  • குஜராத்தின் பங்கு சுமார் 6 சதவீதத்திலிருந்து 11% என்பதாக உயர்ந்த அதே நேரத்தில் தமிழ்நாட்டின் பங்கு 11 சதவீதத்திலிருந்து 7% ஆகக் குறைந்துள்ளது.
  • 2013-14 ஆம் ஆண்டில் 89 ஆக இருந்த அந்நிய நேரடி முதலீட்டிற்கான மூல நாடுகளின் எண்ணிக்கையானது 2024-25 ஆம் ஆண்டில் 112 ஆக அதிகரித்தது.
  • இது வரை பெறப்பட்ட அதிகபட்ச அந்நிய நேரடி முதலீட்டு வரவு ஆனது, 2021-22 ஆம் ஆண்டில் 84.83 பில்லியன் டாலராகும்.
  • சிங்கப்பூர் 14.94 பில்லியன் டாலர் வரவுடன் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீட்டு மூல நாடாக உருவெடுத்துள்ளது.
  • அதைத் தொடர்ந்து மொரிஷியஸ் (8.34 பில்லியன் டாலருக்குப் பதிலாக 3.73 பில்லியன் டாலர்), அமெரிக்கா (சுமார் 5.45 பில்லியன் டாலர்), நெதர்லாந்து (4.62 பில்லியன் டாலர்), ஐக்கிய அரபு அமீரகம் (சுமார் 3.12 பில்லியன் டாலர்), ஜப்பான் (2.47 பில்லியன் டாலர்), சைப்ரஸ் (1.2 பில்லியன் டாலர்), ஐக்கியப் பேரரசு (795 மில்லியன் டாலர்), ஜெர்மனி (469 மில்லியன் டாலர்) மற்றும் கேமன் தீவுகள் (371 மில்லியன் டாலர்) ஆகிய பல நாடுகள் உள்ளன.
  • துறை வாரியான அந்நிய நேரடி முதலீட்டைப் பொறுத்தவரைய, சேவைகள், வர்த்தகம், தொலைத்தொடர்பு, வாகன உற்பத்தித் துறைகள், கட்டுமான உருவாக்கம், மரபுசாரா எரிசக்தித் துறை மற்றும் இரசாயனங்கள் சார்ந்தத் தொழிற்துறைகள் ஆகியவற்றில் முதலீடுகள் அதிகரித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்