2025ல் 30 லட்சம் இணைய வழித் தாக்குதல் சம்பவங்கள் - இந்தியா
February 4 , 2026 213 days 238 0
இந்திய கணினி அவசரகாலப் பதிலளிப்புக் குழு (CERT-In) இணையவழித் தாக்குதல்களுக்கு எதிரான இந்தியாவின் முன்னணிப் பாதுகாப்பு அமைப்பாக உருவெடுத்துள்ளது.
இது 2004 ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் பிரிவு 70B-இன் கீழ் நிறுவப்பட்டது.
CERT-In, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இணையவழிச் சம்பவங்களுக்கான தேசியப் பதிலளிப்பு முகமையாகச் செயல்படுகிறது.
2025 ஆம் ஆண்டில், CERT-In 29.44 லட்சத்திற்கும் மேற்பட்ட இணையவழிச் சம்பவங்களைக் கையாண்டது.
2025 ஆம் ஆண்டளவில், இந்தியாவில் இணைய இணைப்புகளின் எண்ணிக்கை 100 கோடி என்ற மைல்கல்லைத் தாண்டி, 100.29 கோடியாக உயர்ந்ததுஎன்ற நிலையில் இது மார்ச் 2014ல் இருந்த 25.15 கோடியுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஆகும்.
உலகப் பொருளாதார மன்றத்தால் (WEF) வெளியிடப்பட்ட 'குளோபல் சைபர் செக்யூரிட்டி அவுட்லுக் 2025' அறிக்கையில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சூழ்நிலை விழிப்புணர்வு அமைப்புகளைப் பயன்படுத்தியதற்காக CERT-In சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளது.