TNPSC Thervupettagam

2025–26 ஆம் பயிர் ஆண்டிற்கான ஓபியம் உரிமக் கொள்கை

September 20 , 2025 2 days 18 0
  • 2025–26 ஆம் ஆண்டில் ஓபியம் பாப்பி சாகுபடிக்கான வருடாந்திர உரிமக் கொள்கையானது மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது.
  • சுமார் 1.21 லட்சம் விவசாயிகள் இந்த உரிமத்தினைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர் என்பதோடு இது இந்த ஆண்டு 15,000 புதிய விவசாயிகள் சேர்க்கப்பட்டதன் மூலம் 23.5% அதிகரிப்பைக் குறிக்கிறது.
  • மார்பின் மகசூல் (MQY-M) 4.2 கிலோ/ஹெக்டேர் கொண்ட விவசாயிகள் ஓபியம் பிசின்  சாகுபடி உரிமங்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.
  • 3.0 முதல் 4.2 கிலோ/ஹெக்டேர் வரையிலான MQY-M உள்ளவர்கள் ஐந்து ஆண்டு உரிமத்துடன் பாப்பி தண்டு (CPS) உற்பத்தி முறைக்கு மாறலாம்.
  • 2024–25 ஆம் ஆண்டில் 800 கிலோ/ஹெக்டேர் என்ற அளவிற்குக் குறைவான மகசூல் கொண்ட CPS விவசாயிகளின் உரிமங்கள் இடைநிறுத்தப்படும்.
  • 1995–96 ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் செய்யப்பட்ட பதிவுகள் ஆனது உரிமத்தில் விளிம்புநிலை விவசாயிகளை பெருமளவில் சேர்க்க உதவியுள்ளன.
  • இந்தக் கொள்கையானது, ஆல்கலாய்டு விநியோகத்தைப் பாதுகாப்பது, தற்சார்பினை அதிகரிப்பது மற்றும் "Make for World" என்ற தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் இந்திய மருந்தகத்தை ஆதரிப்பது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்