Dictionary.com நிறுவனமானது, பிரபலமான பேச்சுவழக்குப் பயன்பாடு, பொருளற்ற இணையக் கலாச்சாரம் மற்றும் அதிகரித்து வரும் இளையோர் புகழ் ஆகியவற்றை மேற்கோள் காட்டி "67" என்ற எண்ணினை 2025 ஆம் ஆண்டின் சிறந்த சொல்லாக குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சொல்லானது, "அறுபத்தேழு" என்று இல்லாமல் "six-seven/ஆறு-ஏழு" என்று உச்சரிக்கப் படுகிறது என்பதோடு இதற்கு எந்தவொரு தெளிவான பொருளும் இல்லை.
ஆனால் சமூக வலைதளங்கள் மற்றும் விளையாட்டுத் தளங்களில் அதன் பிரபலமான பரவல் அதை ஓர் உணர்ச்சி, ஒரு மகிழ்ச்சிகரமான மனநிலை அல்லது ஒரு பஞ்ச்லைன் என்பதற்கான சுருக்கெழுத்தாக மாற்றியுள்ளது.
Dictionary.com ஆனது இதை 2025 ஆம் ஆண்டின் "மொழியியல் காலக் காப்பகம்" என்று அழைத்தது.
"67" என்ற சொல்லானது டிஜிட்டல் ஊடகங்களில் அதிக எண்ணிக்கையில் குறிப்பிடப் பட்டன என்பதோடு2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது அதன் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆறு மடங்கு அதிகரித்தன.
முதல் முறையாக ஆண்டின் சிறந்த சொல் ஆனது ஒரு சொல் என்பதை விட ஒரு கருத்தை வரையறுக்க அல்லாமல், ஓர் உணர்வை வெளிப்படுத்தப் பயன்படுத்தப் படுகிறது.