TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் தரவு மைய திறன் வளர்ச்சி

January 14 , 2026 35 days 105 0
  • இந்தியாவின் தரவு மையத்தின் கூடுதல் சேர்ப்பு செயல் திறன் 2025 ஆம் ஆண்டில் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து, 2024 ஆம் ஆண்டில் இருந்த 191 மெகாவாட் தகவல் தொழில்நுட்பத் திறனுடன் ஒப்பிடும்போது சுமார் 387 மெகாவாட் தகவல் தொழில்நுட்ப திறனை எட்டியது.
  • மெகாவாட் தகவல் தொழில்நுட்பத் திறன் என்பது தரவு மையங்களில் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை ஆதரிக்கக் கிடைக்கும் மின்சார ஆற்றலைக் குறிக்கிறது.
  • தரவு மையத் தேவை ஆனது 2025 ஆம் ஆண்டில் 407 மெகாவாட் தகவல் தொழில்நுட்பத் திறனிலிருந்து 427 மெகாவாட் தகவல் தொழில்நுட்ப திறனாக வளர்ந்தது என்பதோடு இது ஆண்டிற்கு 5% அதிகரிப்பைக் குறிக்கிறது.
  • 2025 ஆம் ஆண்டில் மொத்த தேவையில் மும்பை மற்றும் சென்னை தோராயமாக 70% பங்கினைக் கொண்டுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டின் இறுதியில், இந்தியாவின் செயல்பாட்டுத் தரவு மைய இருப்பு சுமார் 1,520 மெகாவாட் தகவல் தொழில்நுட்ப திறனை தாண்டியுள்ளது.
  • இந்தியாவின் தரவு மைய திறன் 2030 ஆம் ஆண்டிற்குள் 4,000 மெகாவாட் தகவல் தொழில்நுட்பத் திறன் (4 ஜிகாவாட் தகவல் தொழில்நுட்பத் திறன்) மூன்று மடங்காக அதிகரிக்கும் என்றும், இது 23% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) வளரும் என்றும் இது நாட்டின் அதிகரித்து வரும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு தேவைகளைப் பிரதிபலிக்கிறது என்றும் அறிக்கை கூறுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்