உலக சுகாதார அமைப்பின் உலக செவிலியர்களின் நிலை குறித்த 2025 ஆம் ஆண்டு அறிக்கையானது, செவிலிய பணியாளர் வளம் குறித்த மிகவும் விரிவான மற்றும் புதுப்பித்த பகுப்பாய்வை வழங்குகிறது.
2018 ஆம் ஆண்டில் சுமார் 27.9 மில்லியனாக இருந்த உலகளாவியச் செவிலியப் பணியாளர்களின் எண்ணிக்கையானது 2023 ஆம் ஆண்டில் சுமார் 29.8 மில்லியனாக அதிகரித்தது.
ஆனால் சுமார் 78% செவிலியர்கள் உலக மக்கள்தொகையில் 49% பங்கினை மட்டுமே கொண்டுள்ள நாடுகளில் உள்ளனர்.
ஐரோப்பாவில் ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிகளை விட ஐந்து மடங்கு அதிகமான செவிலியர்கள் உள்ளதுடன், உலகளாவியச் செவிலியர்-மக்கள் தொகை விகிதம் 10,000க்கு 37.1 ஆக உள்ளது.
இந்த விகிதமானது மிக அதிக வருமானம் கொண்ட நாடுகளில் குறைவான வருமானம் கொண்ட நாடுகளை விட 10 மடங்கு அதிகமாக உள்ளது.
உலகளவில் 7 செவிலியர்களில் 1 பேர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் ஆவர்.
இந்தியாவில், உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த 1,000 பேருக்கு 3 செவிலியர் என்ற விகிதத்தை விட மிகக் குறைவாக 1,000 பேருக்கு 1.9 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்தியாவில் 3.3 மில்லியனுக்கும் அதிகமான செவிலியர்கள் இந்தியச் செவிலியர் சபையில் (INC) பதிவு செய்துள்ளனர்.