2025 ஆம் ஆண்டில் உலகளாவிய பனிப்பாறையின் உருகல் நிலை
June 8 , 2025 28 days 42 0
தற்போதைய பருவநிலைக் கொள்கைகளின் காரணமாக உலகமானது 2.7°C வெப்பம் அடைந்தால், உலகின் தற்போதையப் பனிப்பாறைகளில் சுமார் 24% மட்டுமே எஞ்சி இருக்கும்.
பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் படி - உலக வெப்பநிலை உயர்வை 1.5°C ஆகக் கட்டுப்படுத்துவதன் மூலம் சுமார் 54% அல்லது இரண்டு மடங்கு பனிப்பாறைகளின் அளவினைப் பாதுகாக்க முடியும்.
உலகின் உள்ள பனிப் பாறைகள் 2020 ஆம் ஆண்டு நிலைகளுடன் ஒப்பிடும் போது அவற்றின் அளவில் 39 சதவீதத்தினை இழக்கும் என்பதோடு மேலும் இது கடல் மட்டம் ஆனது 113 மில்லி மீட்டர் உயர வழி வகுக்கும்.
ஸ்காண்டிநேவியாவில் உள்ள பனிப் பாறைகள், மேற்கு கனடா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றில் உள்ள ராக்கிஸ் மற்றும் ஐரோப்பிய ஆல்ப்ஸ் ஆகியவை மிகப் பாதிக்கப் படக்கூடிய பகுதிகள் ஆகும்.
இந்து குஷ் இமயமலையில், 2020 ஆம் ஆண்டில் இருந்த பனிப்பாறைகள் தற்போதைய நிலையை ஒப்பிடும் போது, 2°C வெப்ப மயமாதலில் சுமார் 25% பனிப்பாறைகள் மட்டுமே எஞ்சி இருக்கும்.