January 27 , 2026
10 hrs 0 min
39
- இந்திய வங்கிகளின் கடன்-வைப்புத்தொகை (CD) விகிதம் 2025 ஆம் ஆண்டில் சாதனை அளவாக 81.75 சதவீதத்தினை எட்டியது என்பதோடு இது வலுவான கடன் தேவையைக் காட்டுகிறது.
- CD விகிதம் சேகரிக்கப்பட்ட வைப்புகளுடன் ஒப்பிடும் போது வங்கிகளால் வழங்கப் படும் கடன்களை அளவிடுகிறது.
- 81.75% விகிதம் என்பது வங்கிகள் வைப்பு வைக்கப்படும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 81.75 ரூபாய் கடன் வழங்குவதாகும்.
- 2025 ஆம் ஆண்டில் வங்கிக் கடன் 11.4% வளர்ந்தது, அதே நேரத்தில் வைப்புத்தொகை 10.1% மட்டுமே அதிகரித்தது.
- இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கொள்கை குறைப்புகளுக்குப் பிறகு குறைந்த வட்டி விகிதங்கள் காரணமாக வைப்புத் தொகை வளர்ச்சி குறைந்துள்ளது.
- அதிக CD விகிதம் பணப்புழக்க நெருக்கடி மற்றும் பத்திரங்கள் போன்ற மாற்று நிதி ஆதாரங்களை சார்ந்திருப்பதைக் குறிக்கிறது.

Post Views:
39