2025 ஆம் ஆண்டில் மனித உருவம் கொண்ட எந்திரம் வயோமித்ரா
September 4 , 2024 386 days 375 0
அடுத்த ஆண்டு ககன்யான் விண் பயணத்தில் விண்வெளி வீரர்கள் செல்வதற்கு முன், இஸ்ரோ ஒரு மனித உருவம் கொண்ட இயந்திரமான வயோமித்ராவை விண்கலத்தின் பாதுகாப்பைச் சோதிக்க விண்வெளிக்கு அனுப்ப உள்ளது.
இந்த வயோமித்ராவின் மனித உருவத்தின் மண்டை ஓடு, இஸ்ரோவின் திருவனந்தபுரம் பிரிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முதல் முயற்சி, அடுத்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு முன், ககன்யான்-1 (ஜி1) மற்றும் ககன்யான்-2 (ஜி2) ஆகிய இரண்டு ஆளில்லா ஆயத்தப் பயணங்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அனுப்பப்படவுள்ளது.
G2 பயணமானது, வயோமித்ராவை மனிதர்கள் பயணத்திற்கு இணையான அழுத்தம் கொண்ட வீரர்கள் பெட்டகத்தில் இட்டு கொண்டு செல்ல உள்ளது.