யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளங்களில் 2025 ஆம் ஆண்டிற்கான 26 புதிய தளங்களின் புதிய சேர்க்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டிற்கான 32 பரிந்துரைகளில், 21 கலாச்சாரம் சார்ந்த தளம், நான்கு இயற்கை சார்ந்த தளம் மற்றும் ஒரு கலப்புத் தளத்திற்கு உலகப் பாரம்பரிய அந்தஸ்து வழங்கப் பட்டது.
யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் குழு 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பிரான்சின் பாரிஸில் அதன் 47 வது கூட்டத்திற்காக கூடியது.
யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய மாநாடு 1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
2025 வாக்கில், இந்தியா புகழ்பெற்ற 44 உலகப் பாரம்பரியத் தளங்களைக் கொண்டு உள்ளது.
இதில் 35 கலாச்சாரம் சார்ந்த தளம், 7 இயற்கை சார்ந்த தளம் மற்றும் 1 கலப்புத் தளம் ஆகியவை அடங்கும்.
மராட்டிய இராணுவ நிலப்பரப்புகள் 44வது யுனெஸ்கோவின் பாரம்பரியத் தளமாகும்.
2025 ஆம் ஆண்டு ஜூலை மாத நிலவரப்படி, 170 நாடுகளில் மொத்தம் 1,248 உலகப் பாரம்பரியத் தளங்கள் உள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட 61 தளங்களுடன் இத்தாலி அதிக தளங்களைக் கொண்ட நாடாக உள்ளது, அதைத் தொடர்ந்து சீனா 60 தளங்களையும், ஜெர்மனி 55 தளங்களையும், பிரான்ஸ் 54 தளங்களையும் கொண்டுள்ளது.
ஐ.நா.வின் ஒரே ஒரு உறுப்பு நாடான லிச்சென்ஸ்டீன் மட்டுமே உலகப் பாரம்பரிய ஒப்பந்தத்தை அங்கீகரிக்கவில்லை.
மொத்தம் 44 உலக பாரம்பரியத் தளங்களுடன், இந்தியா இப்போது உலகளவில் 6வது இடத்திலும், ஆசியா-பசிபிக் பகுதியில் சீனாவுக்கு அடுத்து 2வது இடத்திலும் உள்ளது.