2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ள வழக்குகள்
September 19 , 2025 15 hrs 0 min 20 0
2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத நிலவரப் படி, இந்திய உச்ச நீதிமன்றத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விட அதிகபட்சமாக மொத்தம் 88,417 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நீதிமன்றம் அதன் முழு அங்கீகரிக்கப்பட்ட நீதித்துறை எண்ணிக்கையான 34 நீதிபதிகளுடன் செயல்படுகிறது.
தேசிய நீதித்துறை தரவுக் கட்டமைப்பானது 69,553 உரிமையியல் வழக்குகள் மற்றும் 18,864 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதைக் காட்டுகிறது.
ஆகஸ்ட் மாதத்தில், 7,080 புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன அதே நேரத்தில் 5,667 வழக்குகள் மட்டுமே தீர்க்கப்பட்டன என்பதோடு இது 80.04% வழக்குத் தீர்வு வீதத்தினைக் குறிக்கிறது.
நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைப்பதற்காக, மே முதல் ஜூலை வரையிலான கோடை விடுமுறையின் போது 21 அமர்வுகளை நடத்தும்படி இந்தியத் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டில் மூன்று தலைமை நீதிபதிகள் இவ்வாறு முயற்சித்த போதிலும், நீதிமன்றத்தில் காலியிடங்கள் சுழியமாக இருந்த போதிலும், நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.