2024-25 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டில் (FDI) அமெரிக்காவும் சிங்கப்பூரும் இணைந்து மூன்றில் ஒரு பங்கு முதலீட்டினை பங்களித்தன.
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், பதிவு செய்த 45,702 நிறுவனங்களில், 41,517 நிறுவனங்கள் அந்நிய நேரடி முதலீடு அல்லது வெளிநாட்டு நேரடி முதலீட்டை (ODI) பதிவு செய்தன.
அந்நிய நேரடி முதலீட்டைப் பெறும் நிறுவனங்களில் நான்கில் மூன்று பங்கு 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் துணை நிறுவனங்களாகும்.
2024-25 ஆம் ஆண்டில் மொத்த அந்நிய நேரடி முதலீடு 68,75,931 கோடி ரூபாயாக இருந்தது என்பதோடுஇதில் அமெரிக்கா 20% மற்றும் சிங்கப்பூர் 14.3% பங்களித்தது.
சந்தை மதிப்பின் அடிப்படையில் உற்பத்தித் துறை 48.4% என்ற மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றது என்ற நிலையில்அதைத் தொடர்ந்து சேவைகள் துறை பெற்றது.
97 சதவீதத்திற்கும் மேற்பட்ட FDI பெறும் நிறுவனங்கள் பட்டியலிடப்படாதவை என்பதோடு அவை நிதி சாரா நிறுவனங்கள் ஆகும் என்ற நிலையில் அவை முக மதிப்பிலான 90.5% பங்குகளை வைத்திருந்தன.