2025 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மருந்தியல் துறையின் ஏற்றுமதி
April 22 , 2025 139 days 149 0
இந்திய மருந்தியல் துறையின் ஏற்றுமதியானது 2025 ஆம் நிதியாண்டில் சுமார் 30,467. 32 மில்லியன் டாலரை எட்டியதோடு இது 2024 ஆம் நிதியாண்டில் பதிவான 27,851.70 மில்லியன் டாலரை விட 9 சதவீதத்திற்கும் மேல் அதிகமாகும்.
மார்ச் மாதத்தில் பதிவான மருந்தியல் துறையின் ஏற்றுமதியானது ஆண்டிற்கு 31.21 சதவீதம் அதிகரித்து 3681.51 மில்லியன் டாலராக (2805.71 மில்லியன் டாலர்) இருந்தது.
2025 ஆம் நிதியாண்டில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி (மதிப்பு அடிப்படையில்) 14.29 சதவீதம் அதிகரித்து 8,953.37 மில்லியன் டாலராக இருந்தது.
கடந்த நிதியாண்டில் இந்தியாவின் மருந்து ஏற்றுமதியில் முன்னணியில் இருந்த பிற நாடுகள் ஐக்கியப் பேரரசு, பிரேசில், பிரான்சு மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியன ஆகும்.