2024-25 ஆம் ஆண்டில் நாட்டின் ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதி அதிகப் பங்கு வகிக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கியது.
2024-25 ஆம் ஆண்டில், இந்தியாவின் மொத்த ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதி 36.61 பில்லியன் டாலர் ஆகும்.
இதில், தமிழ்நாட்டின் பங்களிப்பு சுமார் 7.99 பில்லியன் டாலர் அல்லது 26.81 சதவீதப் பங்காகும்.
இதனை ஒப்பிடுகையில், 2023-24 ஆம் ஆண்டில், 34.43 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில், மாநிலத்தின் பங்களிப்பு 7.15 பில்லியன் (20.78 சதவீதம்) டாலராகும்.
குஜராத் இரண்டாவது இடத்திலும், 3.83 பில்லியன் (12.84 சதவீதம்) டாலர் மதிப்பிலான ஏற்றுமதியுடன் மகாராஷ்டிரா மூன்றாவது இடத்திலும் இதில் இடம் பெற்றன.