July 11 , 2026
4 days
79
- ஜேஷ்ட வர்ண மகா விகாரம் என்பது 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பிறகு இந்திய உதவியுடன் மீண்டும் கட்டப்பட்ட ஒரு நேபாள பௌத்த மடாலயமாகும்.
- இது 2025 ஆம் ஆண்டிற்கான யுனெஸ்கோ ஆசியா-பசிபிக் கலாச்சாரப் பாரம்பரியப் பாதுகாப்பு விருதை வென்றுள்ளது.
- ஜேஷ்ட வர்ண மகா விகாரம், 17 ஆம் நூற்றாண்டின் பௌத்த மடாலயமான ஜ்யாபா பாஹி என்றும் அழைக்கப்படுகிறது.
- நேவார் பௌத்த சமூகம் நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்கின் பூர்வீக மக்கள் ஆவர்.
- அவர்கள் தனித்துவமான, இல்லறத்தை அடிப்படையாகக் கொண்ட வஜ்ரயான பாரம்பரியத்தைப் பின்பற்றுகிறார்கள்.
- அவர்கள் இந்த மடாலயத்துடன் தொடர்புடையவர்கள்.
- பௌத்த பாறைச் செதுக்கல் கட்டிடக்கலையில், சைத்தியம் என்பது ஒரு ஸ்தூபியை மையமாகக் கொண்ட ஒரு புனிதமான பிரார்த்தனை மண்டபம் அல்லது சன்னதி ஆகும்.
- விகாரம் என்பது துறவிகளின் வசிப்பிடமாகவும், ஒன்று கூடும் இடமாகவும் செயல் படும் ஒரு மடாலயமாகும்.
- அஜந்தா குகைகள்: உலக பாரம்பரிய பாறைச் செதுக்கல் சைத்தியங்கள் மற்றும் விரிவாக வரையப்பட்ட விகாரங்கள் இரண்டையும் கொண்டுள்ளது.
- கார்லா குகைகள்: மிகப் பெரியதும், மிகவும் முழுமையானதுமான பழமையான சைத்திய மண்டபத்தைக் கொண்டுள்ளது.
- எல்லோரா குகைகள்: சைத்திய மண்டபங்களுடன், பிரம்மாண்டமான பல அடுக்கு விகாரங்களையும் கொண்டுள்ளது.
- மேற்கூறிய அனைத்தும் மகாராஷ்டிராவில் அமைந்துள்ளன.
Post Views:
79