2025-2026 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய்
July 29 , 2025
10 hrs 0 min
23
- 2025-2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் சுமார் 14.5% அதிகரித்து 43,070.45 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
- கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் இருந்த 37,605.43 கோடி ரூபாயிலிருந்து தற்போது இது 43,070.45 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
- தமிழ்நாட்டின் மொத்த வருவாய் வரவுகளில் மாநிலங்களின் சொந்த வரி வருவாய் (SOTR) 75.3% ஆகும்.
- தமிழ்நாட்டின் மொத்த வருவாய் வரவுகளில் SOTR, ஒன்றிய அரசின் வரிகளின் பங்கு, வரி சாராத வருவாய் மற்றும் மானிய உதவிப் பங்களிப்பு ஆகியவை அடங்கும்.
- தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் (CAG) அலுவலகத்தின் தற்காலிகப் புள்ளி விவரங்களின்படி இந்தத் தகவல் கூறப்பட்டுள்ளது.
- SOTR கூறுகளில், மாநிலத்தின் சரக்கு மற்றும் சேவை வரி (SGST) வசூல் கிட்டத்தட்ட 21% அதிகரித்துள்ளது.
- பிற வரிகள் மற்றும் கட்டணங்களிலிருந்து வரும் வருவாய் சுமார் 23.9% அதிகரித்துள்ளது.
- பத்திரங்கள் மற்றும் பதிவுக் கட்டணங்களிலிருந்து வரும் வருவாய் 19.3% அதிகரித்துள்ளது.
- மாநிலக் கலால் வரிகள் (மதுபான வருவாயை உள்ளடக்கும்) 2,904.47 கோடி ரூபாயாக அதிகரித்தன.
- விற்பனை மற்றும் வர்த்தகம் போன்ற உள் வரிகளிலிருந்து (பெட்ரோல் மற்றும் டீசல் மற்றும் மதுபானம் மீதான VAT உட்பட) வருவாய் வசூல் 7.8% அதிகரித்துள்ளது.
- நில வருவாய் 2025-2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 51.83 கோடி ரூபாயாக அதிகளவில் குறைந்துள்ளது.
- மாநில அரசு ஆனது 2025-2026 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு மதிப்பீடுகளில், SOTR 2,20,894.58 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.
- 2024-2025 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளான 1,92,752.43 கோடி ரூபாயிலிருந்து இது 14.6% அதிகமாகும்.
- 2025-2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மத்திய வரிகளில் மாநிலத்தின் பங்கு 13,296.29 கோடி ரூபாயாக இருந்தது.
- வருவாய்ப் பற்றாக்குறை என்பது செலவுகள் வரவுகளை விட அதிகமாக இருப்பதைக் குறிக்கிறது.
- நிதிப் பற்றாக்குறை என்பது மொத்த வரவுகளுக்கும் மொத்த செலவினங்களுக்கும் இடையிலான வித்தியாசமாகும்.

Post Views:
23