2025-26 ஆம் நிதியாண்டில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் 25 லட்சம் புதிய LPG இணைப்புகளை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.
2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தப் பெண்களுக்கு எரிவாயு இணைப்பிற்கான முதல் கட்ட இணைப்பு அல்லது முதல் நிரப்புதலுக்கான கட்டணம் வசூலிக்காமல் LPG இணைப்புகளை வழங்குவதை PMUY நோக்கமாகக் கொண்டுள்ளது.
PMUY திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மொத்த LPG இணைப்புகள் சமீபத்திய விநியோகத்திற்குப் பிறகு 10.58 கோடியை எட்டும்.