TNPSC Thervupettagam

2025-26 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கடன் வாங்கும் திட்டம்

April 11 , 2025 42 days 120 0
  • 2025-26 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 20,000 கோடி ரூபாய்களை கடன் வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
  • இது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட மாநிலங்களின் குறியீட்டுச் சந்தைக் கடன் பட்டியலின் படி திட்டமிடப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மாநில மேம்பாட்டுக் கடன்கள் (SDLs) எனப்படும் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் நிதி திரட்டுகின்றன.
  • இந்தப் பத்திரங்களுக்கான ஒரு ஏலம் ஆனது இந்திய ரிசர்வ் வங்கியினால் நடத்தப் படுகிறது.
  • பத்திரங்கள் பல்வேறு நிறைவு காலக் கட்டங்களுக்கு வழங்கப்படுகின்றன மற்றும் அதன் கால நிறைவின் போது மாநிலங்கள் வட்டியுடன் அசலையும் திருப்பிச் செலுத்த வேண்டும்.
  • இந்தக் கடன்களைப் பெறுவதற்கும் திருப்பிச் செலுத்துவதற்குமான மதிப்பீடுகள் இந்திய அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட ஒட்டு மொத்தக் கடன் உச்சவரம்பின் அடிப்படையில் இறுதி செய்யப்பட்டுள்ளன.
  • 2025-26 ஆம் ஆண்டில் மொத்தம் 1,62,096.76 கோடி ரூபாய் கடன் வாங்கவும், 55,844.53 கோடி ரூபாயைத் திருப்பிச் செலுத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
  • இதன் ஒரு விளைவாக, 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப் படி நிலுவையில் உள்ள கடன் தொகை 9,29,959.30 கோடி ரூபாயாக இருக்கும்.
  • 2025-26 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளில், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) கடன் விகிதம் 26.07% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • இது 15வது நிதி ஆணையத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட 28.70% என்ற ஒரு இலக்கிற்குள் இருந்தது.
  • 2024-25 ஆம் நிதியாண்டில் (ஜனவரி மாதம் வரை), இந்திய ரிசர்வ் வங்கித் தரவுகளின் படி, தமிழ்நாட்டின் மொத்த சந்தை கடன் 88,025 கோடி ரூபாயாக இருந்தது.
  • திருப்பிச் செலுத்துதல்களை ஈடு செய்த பிறகு, நிகரக் கடன்கள் 60,175 கோடி ரூபாயாக இருந்தது.
  • 2025-26 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மிக அதிகபட்சமாக 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான மொத்த கடன்களை மகாராஷ்டிரா பெற்றுள்ளது.
  • 2025-2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பெறப் பட்டு வரும் கடன்களில் பீகார், குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை சுமார் நான்கில் மூன்று பங்கைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்