TNPSC Thervupettagam

2025 MMR, U5MR, NMR குறித்த சமீபத்தியத் தகவல்கள்

May 13 , 2025 16 hrs 0 min 23 0
  • இந்தியாவின் கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் MMR, U5MR, NMR ஆகியவற்றில் ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான மேம்பாட்டு இலக்குகளை (SDGs) அடைந்துள்ளன.
  • பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு விகிதம் அல்லது MMR – என்பதின் இலக்கு 2030 ஆம் ஆண்டில் <=70; ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்பு விகிதம் அல்லது U5MR – என்பதின் இலக்கு 2030 ஆம் ஆண்டில் <=25; மற்றும் பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்பு விகிதம் அல்லது NMR – என்பதின் இலக்கு 2030 ஆம் ஆண்டில் <=12 ஆக உள்ளது.
  • கேரளா (20), மகாராஷ்டிரா (38), தெலுங்கானா (45), ஆந்திரப் பிரதேசம் (46), தமிழ்நாடு (49), ஜார்க்கண்ட் (51), குஜராத் (53), மற்றும் கர்நாடகா (63) உள்ளிட்ட எட்டு மாநிலங்கள் ஏற்கனவே MMR SDG இலக்கை அடைந்துள்ளன.
  • கேரளா (8), டெல்லி (14), தமிழ்நாடு (14), ஜம்மு & காஷ்மீர் (16), மகாராஷ்டிரா (16), மேற்கு வங்காளம் (20), கர்நாடகா (21), பஞ்சாப் (22), தெலுங்கானா (22), இமாச்சலப் பிரதேசம் (23), ஆந்திரப் பிரதேசம் (24), மற்றும் குஜராத் (24) ஆகிய பன்னிரண்டு மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசங்கள் ஏற்கனவே U5MR SDG இலக்கை அடைந்துள்ளன.
  • கேரளா (4), டெல்லி (8), தமிழ்நாடு (9), மகாராஷ்டிரா (11), ஜம்மு & காஷ்மீர் (12), மற்றும் இமாச்சலப் பிரதேசம் (12) ஆகிய ஆறு இந்திய மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்கள் ஏற்கனவே NMR SDG இலக்கை அடைந்துள்ளன.
  • 2019-21 ஆம் ஆண்டில் 93 ஆக இருந்த MMR ஆனது 2014-16 ஆம் ஆண்டில் 37 புள்ளிகள் குறைந்து ஒரு லட்சம் நேரடிப் பிறப்புகளுக்கு 130 என்ற அளவாகப் பதிவானதுடன் இந்தியாவின் MMR பதிவில் குறிப்பிடத்தக்கச் சரிவு பதிவாகியுள்ளது.
  • 2014 ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு சுமார் 39 ஆக இருந்த இந்தியாவின் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு விகிதம் (IMR) ஆனது, 2021 ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு 27 ஆகக் குறைந்தது.
  • 2014 ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு 26 ஆக இருந்த NMR ஆனது, 2021 ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு 19 ஆகக் குறைந்தது.
  • 2014 ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு 45 ஆக இருந்த U5MR ஆனது 2021 ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு 31 ஆகக் குறைந்தது.
  • 2014 ஆம் ஆண்டில் 899 ஆக இருந்த பிறப்பின் போது பதிவான பாலின விகிதம் ஆனது 2021 ஆம் ஆண்டில் 913 ஆக உயர்ந்தது.
  • மொத்தக் கருவுறுதல் விகிதமானது 2021 ஆம் ஆண்டில் 2.0 ஆக நிலையாக உள்ளது.
  • இது 2014 ஆம் ஆண்டில் 2.3 ஆக இருந்த விகிதத்திலிருந்து பதிவாகிய குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்றமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்