இந்தியாவின் கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் MMR, U5MR, NMR ஆகியவற்றில் ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான மேம்பாட்டு இலக்குகளை (SDGs) அடைந்துள்ளன.
பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு விகிதம் அல்லது MMR – என்பதின் இலக்கு 2030 ஆம் ஆண்டில் <=70; ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்பு விகிதம் அல்லது U5MR – என்பதின் இலக்கு 2030 ஆம் ஆண்டில் <=25; மற்றும் பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்பு விகிதம் அல்லது NMR – என்பதின் இலக்கு 2030 ஆம் ஆண்டில் <=12 ஆக உள்ளது.
கேரளா (20), மகாராஷ்டிரா (38), தெலுங்கானா (45), ஆந்திரப் பிரதேசம் (46), தமிழ்நாடு (49), ஜார்க்கண்ட் (51), குஜராத் (53), மற்றும் கர்நாடகா (63) உள்ளிட்ட எட்டு மாநிலங்கள் ஏற்கனவே MMR SDG இலக்கை அடைந்துள்ளன.
கேரளா (8), டெல்லி (14), தமிழ்நாடு (14), ஜம்மு & காஷ்மீர் (16), மகாராஷ்டிரா (16), மேற்கு வங்காளம் (20), கர்நாடகா (21), பஞ்சாப் (22), தெலுங்கானா (22), இமாச்சலப் பிரதேசம் (23), ஆந்திரப் பிரதேசம் (24), மற்றும் குஜராத் (24) ஆகிய பன்னிரண்டு மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசங்கள் ஏற்கனவே U5MR SDG இலக்கை அடைந்துள்ளன.
கேரளா (4), டெல்லி (8), தமிழ்நாடு (9), மகாராஷ்டிரா (11), ஜம்மு & காஷ்மீர் (12), மற்றும் இமாச்சலப் பிரதேசம் (12) ஆகிய ஆறு இந்திய மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்கள் ஏற்கனவே NMR SDG இலக்கை அடைந்துள்ளன.
2019-21 ஆம் ஆண்டில் 93 ஆக இருந்த MMR ஆனது 2014-16 ஆம் ஆண்டில் 37 புள்ளிகள் குறைந்து ஒரு லட்சம் நேரடிப் பிறப்புகளுக்கு 130 என்ற அளவாகப் பதிவானதுடன் இந்தியாவின் MMR பதிவில் குறிப்பிடத்தக்கச் சரிவு பதிவாகியுள்ளது.
2014 ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு சுமார் 39 ஆக இருந்த இந்தியாவின் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு விகிதம் (IMR) ஆனது, 2021 ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு 27 ஆகக் குறைந்தது.
2014 ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு 26 ஆக இருந்த NMR ஆனது, 2021 ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு 19 ஆகக் குறைந்தது.
2014 ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு 45 ஆக இருந்த U5MR ஆனது 2021 ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு 31 ஆகக் குறைந்தது.
2014 ஆம் ஆண்டில் 899 ஆக இருந்த பிறப்பின் போது பதிவான பாலின விகிதம் ஆனது 2021 ஆம் ஆண்டில் 913 ஆக உயர்ந்தது.
மொத்தக் கருவுறுதல் விகிதமானது 2021 ஆம் ஆண்டில் 2.0 ஆக நிலையாக உள்ளது.
இது 2014 ஆம் ஆண்டில் 2.3 ஆக இருந்த விகிதத்திலிருந்து பதிவாகிய குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்றமாகும்.