உலகெங்கிலும் உள்ள 52 கிராமங்கள் 2025 ஆம் ஆண்டிற்கான "சிறந்த சுற்றுலா கிராமங்கள்" என்று அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அவை ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு போன்ற பல்வேறு புவியியல் பகுதிகளைச் சேர்ந்தவையாகும்.
2025 ஆம் ஆண்டின் இப்பட்டியலில், எந்த இந்தியக் கிராமங்களும் சேர்க்கப்படவில்லை.
முந்தைய ஆண்டுகளில், தெலுங்கானாவில் உள்ள போச்சம்பள்ளி மற்றும் குஜராத்தில் உள்ள தோர்டோ ஆகியவை ஐ.நா. சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.
இந்த முன்னெடுப்பு ஆனது, ஐ.நா. சுற்றுலா அமைப்பினால் (முன்னர் ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பு) 2021 ஆம் ஆண்டில் அதன் "கிராமப்புற மேம்பாட்டிற்கான சுற்றுலா" திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது.