2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் தேசிய நெடுஞ்சாலை விபத்துக்கள்
August 12 , 2025 73 days 93 0
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் (NH) 29,018 பேர் விபத்தினால் உயிரிழந்தனர்.
இது கடந்த ஆண்டின் மொத்த உயிரிழப்புகளில் ஒப்பிடும்போது 50 சதவீதத்திற்கும் அதிகமானதாகும்.
இந்தியாவின் மொத்த சாலை வலையமைப்பில் தேசிய நெடுஞ்சாலை 2% பங்கு மட்டுமே இருந்தாலும், சாலை விபத்து சார்ந்த உயிரிழப்புகளில் அவை 30 சதவீதத்திற்கும் அதிகமாகப் பங்களிக்கின்றன.
2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை தேசிய நெடுஞ்சாலைகளில் 67,933 விபத்துகள் நடந்துள்ளதாக தரவு காட்டுகிறது.
2024 ஆம் ஆண்டில், தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபெற்ற 1,25,873 விபத்துகளில் 53,090 பேர் உயிரிழந்தனர்.
2023 ஆம் ஆண்டில், நடைபெற்ற 1,23,955 விபத்துகளில் 53,630 பேர் உயிரிழந்தனர்.