சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம் (IMD) ஆனது 2025 ஆம் ஆண்டு சீர்மிகு நகரக் குறியீட்டினை வெளியிட்டது.
சூரிச் AAA மதிப்பீட்டில் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து ஒஸ்லோ மற்றும் ஜெனீவா ஆகிய இரண்டும் AAA மதிப்பீடுகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
துபாய் 12வது இடத்திலிருந்து 4வது இடத்திற்கு முன்னேறி, A மதிப்பீட்டுடன் முதலிடத்தில் உள்ளது.
இலண்டன் AA மதிப்பீட்டில் இரண்டு இடங்கள் முன்னேறி 6வது இடத்தைப் பிடித்துள்ளது.
லௌசேன் 10வது இடத்தைப் பிடித்ததுடன், இப்பட்டியலில் மூன்று சுவிஸ் நகரங்கள் முதல் பத்து இடங்களில் உள்ளன.
இந்தக் குறியீடு ஆனது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, இயக்கம், செயல்பாடுகள், வாய்ப்புகள் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றின் அடிப்படையில் நகரங்களை மதிப்பிடுகிறது.
2025 ஆம் ஆண்டு குறியீட்டில் உலகின் முதல் 100 இடங்களுக்கு அப்பால் இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
டெல்லி (CC), மும்பை (CC), ஐதராபாத் (CCC), மற்றும் பெங்களூரு (CC) ஆகியவை முறையே 104வது, 106வது, 109வது மற்றும் 110வது இடங்களைப் பிடித்தன.