சூரியசக்தி, காற்றாற்றல் மற்றும் நீர் மின் ஆற்றல் போன்ற நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியானது, 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 25 ஜிகாவாட் என்ற சாதனையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 222.86 ஜிகா வாட் புதைபடிவம் சாரா ஆற்றல் உற்பத்தி அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
இது 2023-24 ஆம் ஆண்டில் பதிவான 18.56 ஜிகாவாட் என்ற முந்தைய அதிகரிப்பை விஞ்சி, ஒரே ஆண்டில் பதிவான மிக அதிகபட்ச அதிகரிப்பைக் குறிக்கிறது.
சூரிய சக்தி உற்பத்தித் திறன் ஆனது சுமார் 38% அதிகரித்து 100 GW திறனை விஞ்சியது.