TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டில் e-Jagriti தளத்தின் பயனர் வளர்ச்சி

November 21 , 2025 16 hrs 0 min 13 0
  • நுகர்வோர் குறைகளைத் தாக்கல் செய்வதை எளிதாக்குவதற்காக, அரசாங்கத்தின் டிஜிட்டல் தளமான e-Jagriti 2025 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று தொடங்கப் பட்டது.
  • இந்த தளமானது, 2025 ஆம் ஆண்டில் 2.7 லட்சத்திற்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களைப் பெற்றுள்ளது என்ற நிலையில் இதில் 1,388 வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) அடங்குவர்.
  • e-Jagriti ஆனது ஆவண வேலைகளைக் குறைத்தல், பயணத்தைக் குறைத்தல் மற்றும் நுகர்வோர் புகார்களுக்கான நேரடி ஆவணங்களை அகற்றுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தளம் OTP அடிப்படையிலான பதிவு, டிஜிட்டல் வழி பணம் செலுத்துதல், காணொளி வழி விசாரணைகள், இயங்கலை வழி ஆவணப் பரிமாற்றம் மற்றும் நிகழ்நேர வழக்குக் கண்காணிப்பு ஆகியவற்றை அனுமதிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்