2025 ஆம் ஆண்டில் e-Jagriti தளத்தின் பயனர் வளர்ச்சி
November 21 , 2025 14 days 58 0
நுகர்வோர் குறைகளைத் தாக்கல் செய்வதை எளிதாக்குவதற்காக, அரசாங்கத்தின் டிஜிட்டல் தளமான e-Jagriti 2025 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று தொடங்கப் பட்டது.
இந்த தளமானது, 2025 ஆம் ஆண்டில் 2.7 லட்சத்திற்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களைப் பெற்றுள்ளது என்ற நிலையில் இதில் 1,388 வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) அடங்குவர்.
e-Jagriti ஆனது ஆவண வேலைகளைக் குறைத்தல், பயணத்தைக் குறைத்தல் மற்றும் நுகர்வோர் புகார்களுக்கான நேரடி ஆவணங்களை அகற்றுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் தளம் OTP அடிப்படையிலான பதிவு, டிஜிட்டல் வழி பணம் செலுத்துதல், காணொளி வழி விசாரணைகள், இயங்கலை வழி ஆவணப் பரிமாற்றம் மற்றும் நிகழ்நேர வழக்குக் கண்காணிப்பு ஆகியவற்றை அனுமதிக்கிறது.