2025 ஆம் ஆண்டில் அதிகம் பேசப்படும் முதல் 10 மொழிகள்
May 18 , 2025 6 days 43 0
உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சுமார் 23 முக்கிய மொழிகளில் மட்டுமே தங்கள் தகவல் தொடர்பினை மேற்கொள்கிறார்கள்.
2025 ஆம் ஆண்டில் உலகில் அதிகம் பேசப்படும் மொழி ஆங்கிலமாகும்.
இது 188 நாடுகளில் 1.53 பில்லியன் மக்களின் தாய்மொழி மற்றும் இரண்டாவது மொழி ஆகும்.
சீனாவின் அதிகாரப்பூர்வ மொழியான மாண்டரின் சீனம் என்பது, முதல் நிலை மொழி (பூர்வீக) பேசுபவர்களை மட்டும் கணக்கிடச் செய்யும் போது உலகின் மிகப்பெரிய மொழியாகக் கருதப்படுகிறது.
1.18 பில்லியன் பேர்கள் இந்த மொழியை பேசுவதுடன், இது 2025 ஆம் ஆண்டில் உலகில் இரண்டாவது பரவலாகப் பேசப்படும் மொழியாக அமைகிறது.
உலகளாவிய முதல் 20 இடங்களில் 5 இந்திய மொழிகள் இடம் பெற்றுள்ளன.
அவை இந்தி (3வது), வங்காளம் (7வது), உருது (11வது), மராத்தி (16வது), தெலுங்கு (18வது) ஆகியனவாகும்.