ISTAT எனும் இத்தாலியின் தேசியப் புள்ளிவிவரங்கள் நிறுவனத்தின் படி, இந்த ஆண்டு இத்தாலியில் மிகக் குறைந்த பிறப்பு எண்ணிக்கைப் பதிவாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
2024 ஆம் ஆண்டில், 370,000 பிறப்புகள் மட்டுமே பதிவாகின என்ற நிலையில்இது 1861 ஆம் ஆண்டில் இத்தாலி ஒருங்கிணைக்கப் பட்டதிலிருந்து மிகக் குறைவான பதிவாகும் என்பதோடு, இது தொடர்ந்து 16 ஆண்டுகள் சரிவைக் குறிக்கிறது.
2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை, 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது பிறப்புகள் கிட்டத்தட்ட 6.3% குறைந்து 198,000 க்கும் குறைவாக இருந்தன.
2024 ஆம் ஆண்டில் 1.18 ஆக இருந்த கருவுறுதல் விகிதம் ஆனது 2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் ஒரு பெண்ணுக்கு 1.13 குழந்தைகளாகக் குறைந்தது.
55 முதல் 64 வயதுக் குழுவினரின் எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டில் 70% ஆகவும், 65 முதல் 74 வயதுக் குழுவினர் 16% ஆகவும் உயர்வர் என்று கணிக்கப்பட்டுள்ளது.