2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் தூய்மையான எரிசக்தி துறையின் சாதனை
January 19 , 2026 3 days 56 0
2025 ஆம் ஆண்டில் இந்தியா தூய்மையான (புதைபடிவமற்ற எரிபொருள்) எரிசக்தி உற்பத்தி திறனில் சாதனை அதிகரிப்பைப் பதிவு செய்தது.
இந்தியாவின் நிறுவப்பட்ட புதைபடிவமற்ற எரிசக்தி திறன் 2025 ஆம் ஆண்டில் 266.78 ஜிகாவாட் (GW) ஆக உயர்ந்தது.
இது 2024 ஆம் ஆண்டில் 217.62 GW ஆக இருந்ததை விட 22.6% அதிகமாகும்.
இந்த ஆண்டில் மொத்தம் 49.12 GW அளவிலான புதிய புதைபடிவமற்ற எரிசக்தி திறன் சேர்க்கப்பட்டது.
சூரிய சக்தி உற்பத்தித் திறன் 135.81 GW ஆக அதிகரித்தது என்பதோடுமேலும் காற்றாலை மின் உற்பத்தித் திறன் 2025 ஆம் ஆண்டில் 54.51 GW அளவினை எட்டியது.
உயிரி ஆற்றல் 11.61 GW ஆகவும், சிறிய அளவிலான நீர் மின் உற்பத்தித் திறன் 5.16 GW ஆகவும், பெரிய அளவிலான நீர் மின் உற்பத்தித் திறன் 50.91 GW ஆகவும் இருந்தது.