TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டில் உலகளாவியச் செவிலியர்களின் நிலை

May 16 , 2025 50 days 83 0
  • உலக சுகாதார அமைப்பின் உலக செவிலியர்களின் நிலை குறித்த 2025 ஆம் ஆண்டு அறிக்கையானது, செவிலிய பணியாளர் வளம் குறித்த மிகவும் விரிவான மற்றும் புதுப்பித்த பகுப்பாய்வை வழங்குகிறது.
  • 2018 ஆம் ஆண்டில் சுமார் 27.9 மில்லியனாக இருந்த உலகளாவியச் செவிலியப் பணியாளர்களின் எண்ணிக்கையானது 2023 ஆம் ஆண்டில் சுமார் 29.8 மில்லியனாக அதிகரித்தது.
  • ஆனால் சுமார் 78% செவிலியர்கள் உலக மக்கள்தொகையில் 49% பங்கினை மட்டுமே கொண்டுள்ள நாடுகளில் உள்ளனர்.
  • ஐரோப்பாவில் ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிகளை விட ஐந்து மடங்கு அதிகமான செவிலியர்கள் உள்ளதுடன், உலகளாவியச் செவிலியர்-மக்கள் தொகை விகிதம் 10,000க்கு 37.1 ஆக உள்ளது.
  • இந்த விகிதமானது மிக அதிக வருமானம் கொண்ட நாடுகளில் குறைவான வருமானம் கொண்ட நாடுகளை விட 10 மடங்கு அதிகமாக உள்ளது.
  • உலகளவில் 7 செவிலியர்களில் 1 பேர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் ஆவர்.
  • இந்தியாவில், உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த 1,000 பேருக்கு 3 செவிலியர் என்ற விகிதத்தை விட மிகக் குறைவாக 1,000 பேருக்கு 1.9 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர்.
  • இந்தியாவில் 3.3 மில்லியனுக்கும் அதிகமான செவிலியர்கள் இந்தியச் செவிலியர் சபையில் (INC) பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்