November 28 , 2025
15 days
62
- 2025 ஆம் ஆண்டில் இலண்டன் உலகின் மிகவும் விலையுயர்ந்த சில்லறை விற்பனை இடமாக மாறியது.
- குஷ்மேன் மற்றும் வேக்ஃபீல்ட் (C மற்றும் W) அறிக்கையின்படி உலகளாவிய அதிக தெருக்கடைகளின் வாடகை 4.2% அதிகரித்தன.
- மிலனில் உள்ள வியா மான்டெனாபோலியோன் மற்றும் நியூயார்க்கில் உள்ள மேல் மட்ட ஐந்தாவது நிழற்சாலை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தன.
- ஹாங்காங்கில் உள்ள சிம் ஷா சூய், டோக்கியோவில் உள்ள கின்சா மற்றும் சியோலில் உள்ள மியோங்டாங் ஆகிய மூன்று ஆசிய வீதிகள் முதல் பத்து இடங்களில் இருந்தன.
- புது டெல்லியில் உள்ள கான் சந்தை சதுர அடிக்கு 223 அமெரிக்க டாலர்கள் என்ற ஆண்டு வாடகை மற்றும் 3% வளர்ச்சியுடன் 24வது இடத்தைப் பிடித்தது.
- 2025 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 8% என்ற மிகவும் உயர்ந்த பிராந்திய வாடகை வளர்ச்சி என்பது பதிவானது.

Post Views:
62