தேசியப் புலிகள் வளங்காப்பு ஆணையம் (NTCA) வெளியிட்ட சமீபத்தியத் தரவுகளின் படி, 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் 166 புலிகள் இறப்பு பதிவாகியுள்ளது.
இந்த எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் பதிவான 126 புலி இறப்புகளை விட 40 அதிகம் ஆகும்.
1973 ஆம் ஆண்டில் புலிகள் வளங்காப்புத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இது மிக அதிக வருடாந்திரப் புலி இறப்பு விகிதமாகும்.
மத்தியப் பிரதேசத்தில், இந்த ஆண்டில் 55 இறப்புகள் பதிவாகியுள்ளதுடன் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான புலி இறப்புகள் பதிவாகியுள்ளன.
குறிப்பிடத்தக்க புலி இறப்புகள் பதிவான பிற மாநிலங்களில் மகாராஷ்டிராவில் 38 இறப்புகள், கேரளாவில் 13 இறப்புகள் மற்றும் அசாமில் 12 இறப்புகள் பதிவாகின.
2025 ஆம் ஆண்டில் பதிவான மொத்த புலி இறப்புகளில், 31 புலிக் குட்டிகள் ஆகும் என்ற நிலையில், இது இளம் புலிகளின் எளிதில் பாதிக்கப்படக் கூடிய நிலையை எடுத்துக் காட்டுகின்றன.
புலிகள் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இட நெருக்கடியால் எழும் பிராந்திய மோதல்கள் ஒரு முக்கிய காரணமாக நிபுணர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
இழப்புகள் இருந்தபோதிலும், உலகின் புலிகளின் எண்ணிக்கையில் சுமார் 75% புலிகள் இந்தியாவில் உள்ளன என்ற நிலையில்2018 ஆம் ஆண்டில் 2,967 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 3,682 ஆக அதிகரித்துள்ளது.