2025 ஆம் ஆண்டு IPL போட்டிகளில் இருந்து ஹாரி புரூக் விலகல்
March 12 , 2025 112 days 208 0
இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹாரி புரூக் தொடர்ந்து இரண்டாவது முறையாக, இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் (2025) இருந்து விலகியுள்ளார்.
இந்த மாத இறுதியில் தொடங்க உள்ள புதிய IPL போட்டித் தொடருக்காக அவர் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஏலத்தில் பதிவு செய்து, ஏலத்தில் தேர்வு செய்யப்பட்ட பிறகு, அந்தப் போட்டித் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அந்தப் போட்டிகளில் இருந்து விலகிக் கொள்ளும் ஒரு விளையாட்டு வீரர் இரண்டு போட்டித் தொடர்களுக்கு IPL ஏலத்தில் பங்கேற்கத் தடை விதிக்கப்படுவார்.