TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ள வழக்குகள்

September 19 , 2025 15 hrs 0 min 18 0
  • 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத நிலவரப் படி, இந்திய உச்ச நீதிமன்றத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விட அதிகபட்சமாக மொத்தம் 88,417 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
  • நீதிமன்றம் அதன் முழு அங்கீகரிக்கப்பட்ட நீதித்துறை எண்ணிக்கையான 34 நீதிபதிகளுடன் செயல்படுகிறது.
  • தேசிய நீதித்துறை தரவுக் கட்டமைப்பானது 69,553 உரிமையியல் வழக்குகள் மற்றும் 18,864 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதைக் காட்டுகிறது.
  • ஆகஸ்ட் மாதத்தில், 7,080 புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன அதே நேரத்தில் 5,667 வழக்குகள் மட்டுமே தீர்க்கப்பட்டன என்பதோடு இது 80.04% வழக்குத் தீர்வு வீதத்தினைக் குறிக்கிறது.
  • நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைப்பதற்காக, மே முதல் ஜூலை வரையிலான கோடை விடுமுறையின் போது 21 அமர்வுகளை நடத்தும்படி இந்தியத் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
  • 2025 ஆம் ஆண்டில் மூன்று தலைமை நீதிபதிகள் இவ்வாறு முயற்சித்த போதிலும், நீதிமன்றத்தில் காலியிடங்கள் சுழியமாக இருந்த போதிலும், நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்