2025 ஆம் ஆண்டு உத்யோக் சமகம் நிகழ்ச்சியில் தமிழ்நாடு
November 14 , 2025 21 days 91 0
2024 ஆம் ஆண்டு வணிகச் சீர்திருத்தச் செயல் திட்டத்தின் (BRAP) கீழ் நான்கு அளவுருக்களில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
புது டெல்லியில் நடைபெற்ற உத்யோக் சமகம் 2025 நிகழ்ச்சியில் இந்த அங்கீகாரம் அறிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) ஏற்பாடு செய்தது.
வணிக நுழைவு, கட்டுமான அனுமதிகள், தொழிலாளர் சேவை வழங்கீட்டாளர்கள் மற்றும் நில நிர்வாகத்தில் சீர்திருத்தங்களுக்காக வேண்டி தமிழக மாநிலம் இந்த அங்கீகாரத்தினைப் பெற்றது.