2025 ஆம் ஆண்டு கோ கோ உலகக் கோப்பை போட்டி கோப்பை & சின்னம்
January 9 , 2025 111 days 312 0
இந்தியாவானது முதல் முறையாக புது தில்லியில் இதனை நடத்த உள்ளது.
இந்திய கோ கோ கூட்டமைப்பு (KKFI) ஆனது முதலாவது கோ கோ உலகக் கோப்பைப் போட்டிக்கான கோப்பைகளை வெளியிட்டுள்ளது.
இந்தப் போட்டியில் ஆறு கண்டங்களில் உள்ள 24 நாடுகளைச் சேர்ந்த 21 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் அணிகள் பங்கேற்க உள்ளன.
இந்த உலகக் கோப்பை போட்டியில் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டிக்கான நீலநிறக் கோப்பை மற்றும் பெண்கள் போட்டிக்கான பச்சை நிறக் கோப்பை ஆகிய இரண்டு கோப்பைகள் வழங்க ப்படும்.
KKFI ஆனது ‘தேஜஸ்’ மற்றும் ‘தாரா’ என்ற இரட்டை இந்தியச் சிறுமான்களை இந்தப் போட்டிக்கான அதிகாரப்பூர்வ உருவச் சின்னங்களாகப் பயன்படுத்துகின்றது.
இந்த உருவச் சின்னங்கள் ஆனது இவ்விளையாட்டின் முக்கியப் பண்புகளான வேகம், சுறுசுறுப்பு மற்றும் குழுப்பணி ஆகியவற்றை உள்ளடக்கியது.
தேஜஸ் ஆனது புத்திசாலித்தனம் மற்றும் ஆற்றலைக் குறிக்கிறது மற்றும் தாரா, வழி காட்டுதல் மற்றும் விழைவு ஆகியவற்றைக் குறிக்கிறது.