TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டு செந்நிறக் கோள் தினம்- நவம்பர் 28

November 29 , 2025 26 days 58 0
  • இது 1964 ஆம் ஆண்டு அமெரிக்க விண்கலமான மரைனர் 4 நாசாவால் விண்ணில் ஏவப் பட்டதை நினைவு கூர்கிறது.
  • செவ்வாய்க் கிரகத்தின் அண்மை நிலைப் புகைப்படங்களை முதலில் எடுத்தது இந்த விண்கலமே ஆகும்.
  • செவ்வாய்க் கிரகத்தில் பள்ளத்தாக்குகள், எரிமலைகள், பாலைவனங்கள், துருவப் பனிக் கட்டிகள் ஆகிய பல்வேறு நிலப்பரப்புகள் மற்றும் பருவங்கள் உள்ளன.
  • செவ்வாய்க் கிரகத்தில் ஓராண்டு ஆனது 687 பூமி நாட்கள் நீடிக்கும்.
  • செவ்வாய்க் கிரகத்தில் பெரும்பாலும் கார்பன் டை ஆக்சைடு நிரம்பிய ஒரு மெல்லிய வளிமண்டலம் உள்ளது.
  • செவ்வாய்க் கிரகத்தில் உள்ள ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
  • பூமியின் பாதி அளவு கொண்ட செவ்வாய்க் கிரகம் ஆனது  அதன் மேற்பரப்பில் இரும்பு ஆக்சைடு இருப்பதால் சிவப்புக் கிரகம் (செந்நிறக் கோள்) என்று அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்