2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன்
July 2 , 2025 2 days 42 0
இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ஆனது 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 10% உயர்ந்து 736.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்பதோடு இது ஓராண்டிற்கு முன்பு 668.8 பில்லியன் டாலராக இருந்தது.
முந்தைய ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18.5% ஆக இருந்த வெளிநாட்டுக் கடன் மதிப்பு ஆனது 19.1% ஆக அதிகரித்துள்ளது.
ரூபாய் மற்றும் பிற நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்து, மதிப்பீட்டு விளைவுகளில் சுமார் 5.3 பில்லியன் டாலர் கூடியதே இந்த உயர்வுக்கு ஒரு காரணமாகும்.
இந்த விளைவைத் தவிர்த்து இருந்தால், வெளிநாட்டுக் கடன் ஆனது 67.5 பில்லியன் டாலருக்குப் பதிலாக 72.9 பில்லியன் டாலராக அதிகரித்திருக்கும்.
துறை வாரியாக கடன்களாவன:
நிதி அல்லாத நிறுவனங்களின் 261.7 பில்லியன் டாலர் கடன்கள்
அரசாங்கத்தினால் பெறப்பட்ட 168.4 பில்லியன் டாலர் கடன்
வைப்புத் தொகை பெறும் நிறுவனங்களால் பெறப்பட்ட 202.1 பில்லியன் டாலர் (RBI தவிர்த்து)
நீண்ட காலக் கடன் (ஓராண்டில் நிறைவு காலம் முடிவுறும்) ஆனது 60.6 பில்லியன் டாலர் அதிகரித்து 601.9 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
குறுகிய காலக் கடன்களின் (ஓராண்டு வரை நிறைவு காலம் உடையவை) பங்கு 18.3% ஆகக் குறைந்தது ஆனால் அந்நியச் செலாவணி இருப்புகளில் அதன் விகிதம் சுமார் 19.7 சதவீதத்திலிருந்து 20.1% ஆக சற்று உயர்ந்தது.
அமெரிக்க டாலர் மதிப்புள்ள கடன் ஆனது சுமார் 54.2 சாதவீதத்தில் மிகப்பெரிய மதிப்பிலான கடனாக உள்ளது. அதைத் தொடர்ந்து ரூபாய் மதிப்பிலான கடன் (31.1%), யென் மதிப்பிலான கடன் (6.2%), SDR மதிப்பிலான கடன் (4.6%) மற்றும் யூரோ மதிப்பிலான கடன்கள் (3.2%) உள்ளன.
கடன் வகையைப் பொறுத்தவரை, கடன்கள் 34%, நாணயம் மற்றும் வைப்புத் தொகை 22.8%, வர்த்தக் கடன் மற்றும் முன்பணங்கள் 17.8%, மற்றும் கடன் பத்திரங்கள் 17.7% ஆக உள்ளன.
அந்நியச் செலாவணி இருப்பு ஆனது 11 மாத இறக்குமதிகளை அல்லது நிலுவையில் உள்ள வெளிநாட்டுக் கடனில் 96 சதவீதத்தினை ஈடு கட்ட போதுமானது.