TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன்

July 2 , 2025 2 days 38 0
  • இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ஆனது 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 10% உயர்ந்து 736.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்பதோடு இது ஓராண்டிற்கு முன்பு 668.8 பில்லியன் டாலராக இருந்தது.
  • முந்தைய ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18.5% ஆக இருந்த வெளிநாட்டுக் கடன் மதிப்பு ஆனது 19.1% ஆக அதிகரித்துள்ளது.
  • ரூபாய் மற்றும் பிற நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்து, மதிப்பீட்டு விளைவுகளில் சுமார் 5.3 பில்லியன் டாலர் கூடியதே இந்த உயர்வுக்கு ஒரு காரணமாகும்.
  • இந்த விளைவைத் தவிர்த்து இருந்தால், வெளிநாட்டுக் கடன் ஆனது 67.5 பில்லியன் டாலருக்குப் பதிலாக 72.9 பில்லியன் டாலராக அதிகரித்திருக்கும்.
  • துறை வாரியாக கடன்களாவன:
    • நிதி அல்லாத நிறுவனங்களின் 261.7 பில்லியன் டாலர் கடன்கள்
    • அரசாங்கத்தினால் பெறப்பட்ட 168.4 பில்லியன் டாலர் கடன்
    • வைப்புத் தொகை பெறும் நிறுவனங்களால் பெறப்பட்ட 202.1 பில்லியன் டாலர் (RBI தவிர்த்து)
  • நீண்ட காலக் கடன் (ஓராண்டில் நிறைவு காலம் முடிவுறும்) ஆனது 60.6 பில்லியன் டாலர் அதிகரித்து 601.9 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
  • குறுகிய காலக் கடன்களின் (ஓராண்டு வரை நிறைவு காலம் உடையவை) பங்கு 18.3% ஆகக் குறைந்தது ஆனால் அந்நியச் செலாவணி இருப்புகளில் அதன் விகிதம் சுமார் 19.7 சதவீதத்திலிருந்து 20.1% ஆக சற்று உயர்ந்தது.
  • அமெரிக்க டாலர் மதிப்புள்ள கடன் ஆனது சுமார் 54.2 சாதவீதத்தில் மிகப்பெரிய மதிப்பிலான கடனாக உள்ளது. அதைத் தொடர்ந்து ரூபாய் மதிப்பிலான கடன் (31.1%), யென் மதிப்பிலான கடன் (6.2%), SDR மதிப்பிலான கடன் (4.6%) மற்றும் யூரோ மதிப்பிலான கடன்கள் (3.2%) உள்ளன.
  • கடன் வகையைப் பொறுத்தவரை, கடன்கள் 34%, நாணயம் மற்றும் வைப்புத் தொகை 22.8%, வர்த்தக் கடன் மற்றும் முன்பணங்கள் 17.8%, மற்றும் கடன் பத்திரங்கள் 17.7% ஆக உள்ளன.
  • அந்நியச் செலாவணி இருப்பு ஆனது 11 மாத இறக்குமதிகளை அல்லது நிலுவையில் உள்ள வெளிநாட்டுக் கடனில் 96 சதவீதத்தினை ஈடு கட்ட போதுமானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்