2025 ஆம் நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கியின் தங்க இருப்பு
May 7 , 2025 11 hrs 0 min 25 0
இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) 2025 ஆம் நிதியாண்டில் சுமார் 57.5 டன் தங்கத்தினை வாங்கியுள்ளது.
2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தங்கத்தினைத் திரட்டுவதற்கு தொடங்கிய பிறகு, எந்தவொரு நிதியாண்டிலும் மத்திய வங்கி வாங்கிய இரண்டாவது அதிகபட்ச தங்கம் இதுவாகும்.
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் மொத்த தங்க இருப்பு 879.6 டன்களை எட்டியது.
இது முந்தைய ஆண்டின் இதே காலக் கட்டத்தில் 822.1 டன்களாக இருந்த அளவிலிருந்து அதிகரித்துள்ளது.