2025 ஆம் நிதியாண்டில் ஒரு லட்சம் காப்புரிமை தாக்கல்
December 26 , 2025 14 days 70 0
இந்தியாவின் காப்புரிமை விண்ணப்பங்கள் 2024-25 ஆம் நிதியாண்டில் முதல் முறையாக 1 லட்சத்தைத் தாண்டின.
நாட்டின் அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தில் 1.1 லட்சத்திற்கும் மேற்பட்ட காப்புரிமை விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.
இது 2023-24 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட 92,168 காப்புரிமை விண்ணப்பங்களில் இருந்து, சுமார் 20% அதிகரிப்பினைக் குறிக்கிறது.
இந்த தாக்கல்களில் உள்நாட்டு கண்டுபிடிப்பாளர்களின் பங்கு சுமார் 62% ஆகும்.
காப்புரிமைகள், வடிவமைப்புகள், வர்த்தக முத்திரைகள் மற்றும் புவியியல் அடையாளங்கள் என அனைத்துப் பிரிவுகளிலும் வளமான வளர்ச்சியுடன் IPR தாக்கல்கள் 18 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டன.